Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பின்னர் வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறப்பு

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பின்னர் வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறப்பு

பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பூங்கா நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தூய்மைப் பணி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பின்னர் இன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள பூங்காவில் உள்ள நீர்வாழ்ப் பறவைகளுக்கு எச்5என்1 வகை பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது, போபாலில் உள்ள விலங்கு நோய்களுக்கான தேசிய உயர் பாதுகாப்பு நிறுவனம் மூலம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கைந டவடிக்கையாக பூங்கா அக். 22 முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.

பூங்கா வளாகம் முழுவதும் தூய்மைப்பணி மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன. எனினும், பாதுகாப்பு நடவடிக்கையாக பறவைகள் இருக்கும் கூண்டுகள் மற்றும் பகுதிகள் மட்டும் தொடர்ந்து மூடப்பட்டு, பொதுமக்கள் அணுக முடியாதவாறு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. கால்நடை மருத்துவக் குழுவினர் பறவைகளைக் கண்காணித்து வருகின்றனர்.

தற்போது பறவைகள் அனைத்தும் நலமுடன் இருப்பதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், பறவைகளைப் பராமரிக்கும் பணியில் நேரடியாக ஈடுபட்டிருந்த 26 ஊழியர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து வண்டலூர் பூங்கா இன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது. பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பூங்கா நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

இதற்கிடையே, கூடலூரில் அண்மையில் பிடிபட்ட 13 வயதுடைய புலி, சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

முந்தைய செய்தி
Cotton worth ₹27.30 lakh procured at auction
அடுத்த செய்தி
பறக்கும் காரை உருவாக்கிய உத்தராகண்ட் இளைஞர்

தொடர்புடைய செய்திகள்